அழகுக் குறிப்புகள்

சருமத்தை அழகாக்கும் முலாம் பழம்

Published On 2024-05-25 05:33 GMT   |   Update On 2024-05-25 05:33 GMT
  • கோடை காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியை தருவதில் சிறந்த பழமாக முலாம் பழம் உள்ளது.
  • முலாம் பழம் சரும செல்களை பாதுகாக்கிறது.

முலாம் பழத்தில் நீர்ச்சத்தும், வைட்டமின்களும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முலாம் பழம் வைட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற இயற்கை ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. கோடை காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியை தருவதில் சிறந்த பழமாக முலாம் பழம் உள்ளது.

முலாம் பழம் சரும செல்களை பாதுகாக்கிறது. முலாம் பழம் சாப்பிடுபவர்களின் சருமம், வறட்சியாகவோ, சொரசொரப்பாகவோ இருக்காது.

முலாம் பழத்தை சாப்பிட்டாலும் நமது உடலுக்கும் முக அழகிற்கும் நன்மை கிடைக்கும். அத்துடன் முலாம் பழத்தை அப்படியேவும் முகத்தில் தடவி மசாஜ் செய்து, முகத்தை கழுவினால் முகம் அழகு பெறும்.

* முலாம் பழத்தை துண்டுகளாக்கி அரைத்து 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 1 ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை சாதாரண நீரில் கழுவி வந்தால் முகத்தில் சேர்ந்துள்ள தூசுகள் அழுக்குகள் நீங்கி வெண்மை பெறும்.

* முலாம் பழ ஜூஸ் 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், கடலை மாவு 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த முலாம் பழ சாற்றை முகத்தில் பூசி 20 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் வடிதல் நின்று, பருக்கள் உண்டாவதை தடுக்கும்.

Tags:    

Similar News