அழகுக் குறிப்புகள்

அக்குள் கருமையை நீக்க உதவும் வீட்டுக்குறிப்புகள்

Published On 2024-04-01 08:52 GMT   |   Update On 2024-04-01 08:52 GMT
  • ரேசர் பயன்படுத்துவதால் அக்குள் கருமையாகும்.
  • ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிவதில் சிரமம் இருக்கும்.

சருமத்தை சரியாக கவனித்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். முகத்துடன், உடலின் மற்ற பாகங்களின் தோலுக்கும் சமமான கவனிப்பு தேவைப்படுகிறது. அதை நாம் அடிக்கடி புறக்கணிக்கிறோம்.

உடலில் மெலனின் அதிகரிக்கத் தொடங்கும் போது, உடலின் சில பகுதிகள் கருமையாகத் தொடங்கும். இதில் கழுத்து, தொடை இடுக்கு மற்றும் அக்குள்களும் அடங்கும். முடியை அகற்றும் கிரீம் அதிகமாக பயன்படுத்துவதால், அக்குள்களின் நிறமும் கருப்பாக மாறத்தொடங்குகிறது. எனவேதான், இந்த பொருட்களை குறைவாக பயன்படுத்த வேண்டும். முடி அகற்றுவதற்கு ரேசர் போன்றவற்றைப் பயன்படுத்துவதால், அக்குள் கருமையாகும்

முழங்கால்கள் மற்றும் முழங்கைகள் தவிர, நம்மில் பலருக்கு அக்குள் கருமையாக இருக்கும். அக்குள் கருமையாக இருந்தால், நம்மால் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிவதில் சிரமம் இருக்கும். அக்குள் கருமையை போக்க எந்த சிகிச்சையும், விலை உயர்ந்த கிரீம்களை தேவையில்லை. சமையலறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஒரே வாரத்தில் அக்குள் கருமையை நீக்கிவிடலாம்.

 எலுமிச்சை

அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெனில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள், தயிர்

மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்குளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்கலாம்.

தயிர், எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சாற்றில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலக்கவும். காட்டனில் உதவியுடன் அக்குள்களில் தடவவும். பின்னர், 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும். இதை அடிக்கடி செய்து வர நல்ல முன்னேற்றம் தெரியும்.

குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகிவிடும்.

டீ ட்ரீ ஆயில்

தேயிலை மர எண்ணெய் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெய் தோல் தொடர்பான பல பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. அக்குள் கருமையால் அவதிப்பட்டு வந்தால், தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதற்கு, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 கப் தண்ணீரில் 5 துளிகள் தேயிலை மர எண்ணெயைச் சேர்க்கவும். தினமும் குளித்த பிறகு, டீ ட்ரீ ஆயிலை அக்குள்களில் தெளித்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

Tags:    

Similar News