லைஃப்ஸ்டைல்
பப்பாளி பேக்

வறண்ட சருமத்திற்கு ‘பப்பாளி பேக்’

Published On 2021-09-30 03:30 GMT   |   Update On 2021-09-30 03:30 GMT
நீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும்.
அழகான முக அமைப்புகொண்ட பெண்களை ‘பப்பாளி போன்ற பளபளப்புக்கு சொந்தக்காரர்’ என்று வர்ணிப்பார்கள். இந்த வர்ணனைக்கு ஆசைப்படும் பெண்கள் எல்லோரும் தங்கள் சரும அழகுக்கு பப்பாளியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

வறண்ட சருமத்திற்கு ‘பப்பாளி பேக்’

நீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும். சருமத்தில் ஏற்படும் எல்லாவிதமான பாதிப்புகளை குணப்படுத்தும் சக்தியும் பப்பாளிக்கு இருக்கிறது.

பழுத்த பப்பாளி தசைப்பகுதியை கூழாக்கி, அதில் சில தேக்கரண்டி தேன் கலந்து பிசைந்து உடல் முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் உடலை கழுவிவிடுங்கள். உடலில் இருக்கும் கருப்பு புள்ளிகள், படைகள் போன்றவற்றை இது போக்கும்.

மாநிறம் கொண்டவர்கள் தங்கள் நிறத்தை ஓரளவு மேம்படுத்த பப்பாளி உதவும். பழுத்த பப்பாளியில் இரண்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் தசைப்பகுதியை இரண்டு தேக்கரண்டி கடலைமாவுடன் கலந்து, அதில் தயிரும் சேர்த்து கிரீம்போல் ஆக்குங்கள். இதனை உடலில் பூசி, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து இதனை பூசிவந்தால், நல்ல நிற மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறவர்கள் அந்த கிரீமில் சிறிதளவு ரோஸ் ஆயில் கலந்து பயன்படுத்தவேண்டும்.
Tags:    

Similar News