பெண்கள் உலகம்
கூந்தல் பிரச்சனையை தீர்க்க கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்..

கூந்தல் பிரச்சனையை தீர்க்க கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்..

Published On 2021-09-28 12:57 IST   |   Update On 2021-09-28 12:57:00 IST
உங்களுக்கு வைட்டமின் சத்து குறைவாக இருக்கின்றதா என்பதனை அறிந்து தேவையான வைட்டமின் சத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
முடியின் வேர்கால் பலவீனப்படுவதாலும் ராசயனம் பொருட்கள் படுவதாலும் முடி கொட்டுகின்றது. வேர் கால்களை பலப்படுத்தவும். முடியினை ரிப்பேர் செய்யவும், முடி வேர்க்காலுக்கு நல்ல டானிக் அளிக்கக் கூடியதுமான ஒன்றுதான் கறிவேப்பிலை. முடியின் வேர் வலுப்பட்டாலே முடி வளர்ச்சி கூடும். முடி கொட்டுவது நிற்கும். இதிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கறிவேப்பிலை பொடுகுத் தொல்லையினையும் அடியோடு நீக்கும்.

கைப்பிடி அளவு கறிவேப்பிலையினை சிறிதளவு தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி எண்ணெய் கருத்தவுடன் ஆற விட்டு தலையில்தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரம் சென்று தரமான ஷாம்பு கொண்டு தலையினை அலசி விடவும். வாரம் இருமுறை செய்யலாம். பொடுகு நீங்கும். நரை தவிர்க்கப்படும். முடி நன்கு வளரும்.

கறிவேப்பிலையினை நன்கு அரைத்து அதில் சிறிது தயிரினைக் கலந்து தலையில் தடவி 1 மணி நேரம் வைத்திருந்து தலையினை நன்கு அலசி விடுங்கள். வாரம் ஒரு முறை செய்ய முடி செழித்து வளரும்.

டீ ஷர்ட் போன்ற மென்மையான துணியினால் ஈரத்தலையினை துடைக்க வேண்டும். இயற்கையான காற்றில் தலை ஈரம் காய்வதே சிறந்தது. மரசீப்பினை உபயோகிப்பதே சிறந்தது.

இழுத்து இறுக்கமாக போடும் போனிடெயில் முடிக்கு நல்லது.

வைட்டமின் ஈ எண்ணெயினை சில துளிகள் தலையில் தடவவும்.

எப்போதும் கவலை கவலை என்று கவலையில் மூழ்காதீர்கள். முடி கொட்டித் தள்ளி விடும்.

உங்களுக்கு வைட்டமின் சத்து குறைவாக இருக்கின்றதா என்பதனை அறிந்து தேவையான வைட்டமின் சத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

Similar News