லைஃப்ஸ்டைல்
வண்ண வண்ண சேலைகள்.... அழகு தரும் சேலைகள்....

வண்ண வண்ண சேலைகள்.... அழகு தரும் சேலைகள்....

Published On 2021-09-27 08:27 GMT   |   Update On 2021-09-27 08:27 GMT
ஒரு கடைக்குள் நுழைந்து சேலைகளை பார்க்கும் பொழுது சேலைகளில் இத்தனை வகைகளா என்று மலைக்கத் தோன்றுகின்றதல்லவா? இன்று காட்டன் சேலைகளில் இருக்கும் வகைகளை கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...
ஒரு கடைக்குள் நுழைந்து சேலைகளை பார்க்கும் பொழுது சேலைகளில் இத்தனை வகைகளா என்று மலைக்கத் தோன்றுகின்றதல்லவா? ஆமாம் காட்டன் சேலைகளில் பல வகைகள். பட்டுச்சேலைகளில் இருக்கும் வகைகளோ இன்னும் ஏராளம்.

காட்டன் சேலைகளில் இருக்கும் வகைகளை கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...

கோவை காட்டன்:- கொங்கு நாடான கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய கோவை காட்டன் சேலைகள் மென்மையாகவும், அழகான நூல் மற்றும் ஜரி வேலைப்பாடுகளுடனும் கிடைக்கின்றன. இவ்வகை காட்டன் சேலைகளின் வண்ணமும் மிகவும் கான்ட்ராஸ்டாக பார்ப்பவரை கவரும் வகையில் உள்ளது. இவ்வகை சேலைகள் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கும்.

காட்டன் சில்க்:- காட்டனும் பட்டும் சேர்ந்து தயாரிக்கப்படும் காட்டன் சில்க் சேலைகள் அணிந்தவருக்கு அட்டகாசமான தோற்றத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அருமையான வண்ணங்களில் அழகான டிசைன்களுடன் மிகவும் ரிச்சான தோற்றத்தை தருபவையாக காட்டன் சில்க் சேலைகள் இருக்கின்றன. இவை திருமணம், பார்ட்டி விழாக்கள் என அனைத்து விசேஷங்களுக்கும் அணிவதற்கு ஏற்றாற் போல் தயாரிக்கப்படுகின்றன.

கேரளா காட்டன்:- எல்லோராலும் விரும்பி அணியப்படும் கேரளா காட்டன் சேலைகள் பெரும்பாலும் சந்தனம் அல்லது ப்யூர் வொய்ட் நிறத்தில் அகலமான ஜரி பார்டர்களுடன் முந்தி மற்றும் பார்டலில் மயில் கதக்களி கலைஞர்களின் முகம் மற்றும் பூக்கள் போன்ற டிசைன்களுடன் மிகவும் அற்புதமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வகை சேலைகள் குறந்த விலையிலிருந்து பல ஆயிரம் வரையிலும் கிடைக்கின்றன.

ப்யூர் காட்டன்: தினசரி அணிவதற்கு ஏற்ற சேலைகள் இவை. தமிழ்நாட்டில் கோடைக்கு ஏற்ற அற்புதமான சேலைகள் இவை என்று சொல்லாம். முழுவதும் நூல் மற்றும் பிரிண்டட் வேலைப்பாட்டுடன் கண்ணை கவரும் வகையில் இவ்வகை சேலைகள் கோடைக்காலத்தில் விற்பனையில் சாதனை படைக்குகின்றன என்றே சொல்லலாம்.

ஜூட் காட்டன்:- காட்டன் மற்றும் ஜூட் இணைந்து தயாரிக்கப்படும் சேலைகள் பெரும்பாலும் மென்மையான நிறம் மற்றும் டிசைன்களுடன் அணிபவருக்கு மனதிருப்தியை தருகின்றன.

ப்ளெயின் காட்டன்:- சேலைகளில் டிசைன்களை விரும்பாதவர்களின் தேர்வு இதுவாகத்தான் இருக்கும். மென்மையான மஞ்சள் நிறத்திற்கு பச்சை பார்டர், பீச் நிறத்திற்கு ஆரஞ்சு பார்டர், வெந்தய நிறத்திற்கு அடர்த்தியான நீல பார்டர், வான நீலத்திற்கு டார்க் ப்ளு பார்டர் என்று வண்ணங்களின் வர்ணஜாலத்தை இவ்வகை சேலைகளில் பார்க்க முடியும்.

செட்டிநாடு காட்டன்:- பழமையும், புதுமையும் இணைந்து தயாரிக்கப்படுபவை இவை என்று சொல்லலாம். செட்டிநாடு காட்டன் சேலைகளுடன் கலம்காரி டிசைன்களுடன் கூடிய ப்ளவுஸ்கள் விற்பனைக்கு வந்து பெண்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது என்று சொல்லலாம். அடர்த்தியான நிறமுள்ள சேலைகளுக்கு மென்மையான நிறப் ப்ளவுஸ்களும், மென்னையான நிறமுள்ள சேலைகளுக்கு அடர்த்தியான நிறத்தில் கலம்காரி டிசைன்களுடன் பிளவுஸ்களும் பார்ப்பவரை விரும்பி வாங்கத்தூண்டுகின்றன.

சில்க் காட்டன்:- இவற்றில் சிம்பிள் பார்டர்கள் வைத்த சேலைகள், பாலும், பழமும் கட்டங்களில் புட்டா மற்றும் சரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய சேலைகள், கையால் பிரிண்டட் செய்யப்பட்ட சேலைகள், உடல் முழுவதும் கலம்காரி வேலைப்பாடுகளுடன் கூடிய சேலைகள், வைர ஊசி கோர்வை புட்டாக்களுடன் கூடிய சேலைகள், ஜக்கார்ட் செல்ஃப் டிசைன் சேலைகள் என்று பலவகைகளில் நம்மை மயக்குகின்றன.

இவை மட்டுமல்லாமல் கல்யாணி காட்டன் சேலைகள், மதுரை சுங்கடி சேலைகள், ஃபேன்ஸி காட்டன் சேலைகள், கோட்டா காட்டன் சேலைகள், டிரெடிஷனல் காட்டன் சேலைகள், பாலி காட்டன் சேலைகள், பெங்காலி காட்டன் சேலைகள், ஒடிஸா காட்டன் சேலைகள், மங்களகிரி காட்டன் சேலைகள், பள்ளிபாளையம் காட்டன் சேலைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
Tags:    

Similar News