லைஃப்ஸ்டைல்
கோடை காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?

கோடை காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?

Published On 2021-05-10 06:27 GMT   |   Update On 2021-05-10 09:14 GMT
கோடை காலத்தில் (summer) எல்லாருக்குமே உடலில் வியர்வை வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் விளைவாக துர்நாற்றம் ஏற்படும்.
கோடை காலத்தில் தோல் பராமரிப்பு குறித்து கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவ்ஆனந்த் கூறியதாவது:-

கோடை வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியம். இந்த வெயிலில் முதலில் பாதிக்கப்படுவதும் நம்முடைய தோல்களே. இதை பராமரிப்பது மிக முக்கியம். இதற்கு முக்கியமாக தினமும் 2 முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும். கருப்பு நிற ஆடைகளை தவிர்க்க வேண்டும். வாசனை திரவியங்கள், பவுடர்களை தவிர்க்க வேண்டும். காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

அப்படி செல்ல வேண்டுமானால் குடை, தொப்பி, ஹெல்மெட் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும். கோடை காலத்திற்கேற்ற உணவுகளான கீரைகள், இளநீர், நுங்கு, மோர் மற்றும் பழச்சாறு, நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தகுந்த சோப்பு மற்றும் ஷாம்புகளை உபயோகப்படுத்த வேண்டும். குறிப்பாக மதுபானங்களை தவிர்த்தல் நல்லது.

இவ்வாறு டாக்டர் தேவ்ஆனந்த் கூறினார்.
Tags:    

Similar News