லைஃப்ஸ்டைல்
வட்டலப்பம்

இன்று சுவையான வட்டலப்பம் செய்யலாமா?

Published On 2021-10-25 09:28 GMT   |   Update On 2021-10-25 09:28 GMT
இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபமானது. சுவை நிறைந்தது. இன்று இந்த ரெசிபியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

முட்டை - 10
சர்க்கரை - 2 ஆழாக்கு
தேங்காய் - 1
ஏலக்காய் - 3
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை

முட்டையை நுரைபொங்கும் அளவுக்கு நன்றாக அடித்து கலக்கி வடிகட்டி வைக்கவும்.

சர்க்கரையை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

பின்பு தேங்காயை அரைத்து பிழிந்தெடுத்து வடிகட்டிகொள்ளளவும். இதில் முதல் பாலை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

தேங்காய் பாலில் பொடித்த சர்க்கரையையும் அடித்து வைத்த முட்டையையும் நன்றாக கலந்து கொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும்.

ஏலக்காயை வாணலியில் வறுத்துக்பொடித்து முட்டை கலவையில் 1 சிட்டிகை உப்புடன் சேர்த்து கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது நெய், தடவி அதில் இந்த கலவையை ஊற்றி மூடி வைக்கவும்.

அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முட்டை கலவை இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி மிதமான தீயில் வேக வைக்கவும்.

கலவை வேக ஆரம்பித்தவுடன் மீதமுள்ள நறுக்கிய முந்திரி பருப்பை மேலே தூவி மூடியை கொண்டு மூடி விடவும்.

வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு ஒரு சுத்தமான குச்சியை கலவைக்குள் விட்டு பார்க்கவும்.

கலவை வெந்து இருந்தால் குச்சியில் ஒட்டாது. பின்பு அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.

ஆறிய பின்பு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

குறிப்பு

வட்டலப்பத்தில் தண்ணீர் இறங்கி விடாமல் கவனமாக மூடியை திறக்கவும்.
Tags:    

Similar News