லைஃப்ஸ்டைல்
தக்காளி குருமா

சப்பாத்திக்கு அருமையான தக்காளி குருமா

Published On 2021-10-11 09:17 GMT   |   Update On 2021-10-11 09:17 GMT
பல்வேறு வகையான குருமாவை சுவைத்து இருப்பீங்க. இன்று தக்காளியை வைத்து சூப்பரான தக்காளி குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பெ. வெங்காயம் - 3,
தக்காளி - 8,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிது.

அரைக்க:

இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 4 பல்,
பச்சை மிளகாய் - 6,
பட்டை, லவங்கம் - தலா 1,
சோம்பு - கால் டீஸ்பூன்,
மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு.

செய்முறை:

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்து கொள்ளுங்கள்.

பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் தனியே அரைத்தெடுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.

பின்னர், அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

மணமணக்கும் தக்காளி குருமா ரெடி.
Tags:    

Similar News