பெண்கள் உலகம்
சூப்பரான இனிப்பு மங்களூர் போண்டா

சூப்பரான இனிப்பு மங்களூர் போண்டா

Published On 2021-09-22 14:44 IST   |   Update On 2021-09-22 14:44:00 IST
கர்நாடகத்தில் மங்களூர் பஜ்ஜி, மங்களூர் போண்டா போன்ற ஸ்நாக்ஸ் மிகவும் பிரபலமானது. இங்கு அவற்றில் இனிப்பான மங்களூர் போண்டாவை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
தயிர் - 1 1/2 கப்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பௌலில் மைதாவைப் போட்டு, அதில் பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தயிர் சேர்த்து ஓரளவு போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இனிப்பான மங்களூர் போண்டா ரெடி!!!

Similar News