லைஃப்ஸ்டைல்
பலாப்பழ போளி

இன்று தித்திப்பான பலாப்பழ போளி செய்யலாம்

Published On 2021-09-15 09:18 GMT   |   Update On 2021-09-15 09:18 GMT
பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமாக பலாப்பழத்தை வைத்து அருமையான பலாப்பழ போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

கொட்டை நீக்கிய பலாச்சுளை - 20,
கோதுமை மாவு - 100 கிராம்,
பொடித்த வெல்லம் - 200 கிராம்,
கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப்,
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,
நெய் - 50 மி.லி,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை :

கோதுமை மாவைச் சிறிது தண்ணீர், எண்ணெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.  

கடலைப் பருப்பை லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வேகவைத்து கொள்ளவும்.

பலாச்சுளைகளை வேகவைத்து கொள்ளவும்.

மிக்சியில் வேக வைத்த கடலைப்பருப்பு, பலாச்சுளையுடன் தேங்காய் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.

வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, லேசாகக் கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து அதில் அரைத்த தேங்காய்ப் பருப்புடன் சேர்த்து, கெட்டியாகக் கிளறவும்.

கடைசியாக ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறி பூரணமாக உருட்டிக்கொள்ளவும்.

பிசைந்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

இலையில் சிறிது நெய் தடவி அதில் கோதுமை மாவை அப்பள வடிவில் திரட்டி அதன் நடுவில் பலாச்சுளை பூர்ணத்தை வைத்து மூடி, போளியாகத் தட்டி வைக்கவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் திரட்டி வைத்துள்ள போளியை போட்டு மிதமான தீயில், இருபுறமும் நெய் தடவி, வாட்டி எடுக்கவும்.

சூப்பரான பலாப்பழ போளி ரெடி.
Tags:    

Similar News