லைஃப்ஸ்டைல்
காராமணி வடை

மொறு மொறு காராமணி வடை

Published On 2021-09-04 09:20 GMT   |   Update On 2021-09-04 09:20 GMT
காராமணியில் சுண்டல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காராமணியை வைத்து மொறுமொறுப்பான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

காராமணி - 1 கப்
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காராமணியை எட்டு மணி நேரம் ஊறவையுங்கள்.

ஊறிய காராமணியுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

இதனுடன் வெங்காயம், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், இடித்த கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள்.

பிசைந்த மாவை வடையாகத் தட்டி எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

சூப்பரான காராமணி வடை ரெடி.
Tags:    

Similar News