லைஃப்ஸ்டைல்
வெண்டைக்காய் பாதாம் கிரேவி

வெண்டைக்காய் பாதாம் கிரேவி

Published On 2021-07-14 09:41 GMT   |   Update On 2021-07-14 09:41 GMT
சப்பாத்தி, நாண், தோசை, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெண்டைக்காய் பாதாம் கிரேவி. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாதாம் பருப்பு - 10
வெண்டைக்காய் - 100 கிராம் (நறுக்கவும்
பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)
தக்காளி - 3 (நறுக்கவும்)
இஞ்சி - சிறிதளவு
ஏலக்காய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உலர்ந்த வெந்தயக்கீரை - சிறிதளவு
கரம் மசாலாத்தூள், சோம்புத்தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு

செய்முறை:

சுடுநீரில் பாதாம் பருப்பை கால் மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்கிக்கொள்ள வேண்டும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெண்டைக்காயை கொட்டி வதக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பாதாம், ஏலக்காய், வெங்காயம், சோம்புத்தூள், வெந்தயக்கீரை, இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

தக்காளியையும் தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதனுடன் அரைத்து வைத்த விழுதை கொட்டி வதக்க வேண்டும்.

அடுத்து தக்காளி விழுதையும் சேர்த்து கிளறிவிட வேண்டும்.

பின்னர் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிவிடவும்.

இறுதியில் வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும்.

சூப்பரான வெண்டைக்காய் பாதாம் கிரேவி ரெடி.
Tags:    

Similar News