லைஃப்ஸ்டைல்
வேர்க்கடலை ரசகுல்லா

ருசி மிகுந்த வேர்க்கடலை ரசகுல்லா

Published On 2021-03-24 09:30 GMT   |   Update On 2021-03-24 09:30 GMT
உடலுக்கு நலம் சேர்க்கும் சிறுதானியங்களில் இனிப்பு பலகாரங்களை தயாரித்து சுவைக்கலாம். இன்று வேர்க்கடலையை வைத்து சூப்பரான ரசகுல்லா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை பருப்பு - 100 கிராம்
தூளாக்கிய வெல்லம் - 200 கிராம்
மைதா - 50 கிராம்
எண்ணெய் - தேவைக்கு
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
சோடா உப்பு - அரை டீஸ்பூன்
கேசரி பவுடர் - அரை டீஸ்பூன்

செய்முறை:

வெல்லத்தை நீரில் கலந்து பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

வேர்க்கடலையை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்.

மைதா மாவுடன் சிறிதளவு வெந்நீர், சோடா உப்பு, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசையவும்.

அதனுடன் அரைத்த வேர்க்கடலையையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

பின்னர் மாவு கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

அந்த உருண்டைகளை வெல்ல பாகுவில் ஊறவைத்து ருசிக்கலாம்.

சூப்பரான வேர்க்கடலை ரசகுல்லா ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News