லைஃப்ஸ்டைல்
ஜீரா புலாவ்

15 நிமிடத்தில் சத்தான சுவையான புலாவ் செய்யலாம் வாங்க...

Published On 2021-03-08 09:31 GMT   |   Update On 2021-03-08 09:31 GMT
உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர்களுக்கு சீரகம் ஒரு அருமருந்து. உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தினமும் ஏதாவது ஒரு வகையில் சீரகத்தை தவறாமல் தங்கள் உணவில் எடுத்து கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
சீரகம் - 2 மேசைக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1

செய்முறை:

வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.

பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும்.

சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போனதும் ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடவும்.

நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.

சுவையான ஜீரா புலாவ் தயார்.

குருமா வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News