மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட இந்த ஸ்நாக்ஸ் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெபிசி செய்முறையை பார்க்கலாம்.
ஜவ்வரிசி - 1 கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு -2
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
கொத்தல்லி - சிறிதளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
கறிவேப்பிலை -சிறிதளவு
செய்முறை:
கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை நன்கு கழுவி சிறிது நீர் தெளித்து 2 மணி நேரம் ஊற விடவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து போட்டு அதனுடன் ஜவ்வரிசி, ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
இந்த மாவை சிறிய உருண்டையாக எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.