பலாப்பழம் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இன்று பலாப்பழம், பால் சேர்த்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
நறுக்கிய பலாப்பழத் துண்டுகள் - 2 கப்
கோதுமை மாவு - அரை கப்
சர்க்கரை - 2 கப்
பால் - 2 கப்
முந்திரி துண்டுகள் - தேவையான அளவு
பாதாம் - தேவையான அளவு
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
நெய் - கால் கப்
சமையல் எண்ணெய் - அரை கப்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
செய்முறை
ஒரு கப் பாலில் பலாத் துண்டுகளைப் போட்டு வேக வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
பாதாமை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கோதுமை மாவை நன்கு வறுக்கவும்.
முந்திரியையும் பொன்நிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியில் மீதமுள்ள பால், அரைத்த பலா விழுது, கோதுமை மாவு, சர்க்கரை, சமையல் எண்ணெய் அனைத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
கைவிடாமல் கிளறி இடைஇடையே நெய்யை சேர்த்து கொண்டே வரவும்.
சர்க்கரை கரைந்து எல்லாம் சேர்ந்து வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும்போது கேசரி பவுடரைச் சிறிதளவு பாலில் கரைத்து ஊற்றவும்.
முந்திரி, பாதாம், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.
சுவையான பலாப்பழ அல்வா தயார்.