லைஃப்ஸ்டைல்
பன்னீர் பாயாசம்

சூப்பரான பன்னீர் பாயாசம்

Published On 2020-12-09 09:31 GMT   |   Update On 2020-12-09 09:31 GMT
பருப்பு பாயாசம், பால் பாயாசம் என்று பல வித பாயாசம் செய்வார்கள். ஆனால் இன்று பன்னீரில் பாயாசம் செய்து குடும்பத்தாரை அசத்துங்கள்..
தேவையான பொருள்கள்:

பால் - 1 லிட்டர் 
பன்னீர் - 1 கப் 
அரிசி மாவு - 1 ஸ்பூன் 
ஏலக்காய் - 6 
சர்க்கரை - 1/4 கப் 
உலர்ந்த திராட்சை - தேவையான அளவு 
குங்குமப்பூ - தேவையான அளவு 
பாதாம் - 5 
பிஸ்தா - 5. 

செய்முறை:

பன்னீரை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் பால் மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் கிளற வேண்டும். 

கிளறும் பொழுது கட்டிகள் வராதவாறு பார்த்து கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்த பிறகு பால் கெட்டி ஆகி விடும்.

பிறகு அதில் உலர்ந்த திராட்சை பழங்கள், ஏலக்காய், குங்குமப்பூ, தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். 

நன்றாக கெட்டி பதத்தில் வந்த பிறகு அதில் நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு 3 நிமிடம் மிதமான தீயில் கிளறி விடவும்.. 

அடுத்து அடுப்பை அனைத்து பாயசத்தை ஒரு பௌலில் மாற்றி பாதாம், பிஸ்தா குங்கும பூ ஆகியவை கொண்டு அலங்கரித்தால் பன்னீர் பாயசம் தயார்... 

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News