லைஃப்ஸ்டைல்
செட்டிநாட்டு பிடிகருணை மசியல்

செட்டிநாட்டு பிடிகருணை மசியல்

Published On 2020-11-28 09:33 GMT   |   Update On 2020-11-28 09:33 GMT
பிடிகருணை கிழங்கு மசியல் மிகவும் பிரபலமான செட்டிநாடு சமையல் வகையைச் சேர்ந்தது. ரொம்பவும் சுவையான இந்த மசியலை செய்வது மிகவும் எளிது.
தேவையான பொருட்கள்:

பிடிகருணைக் கிழங்கு - 5
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
சிவப்பு மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
புளி -  சிறு கோலி அளவு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

கருணைக் கிழங்கை நன்றாக மண் போக கழுவி, குக்கரில் போட்டு கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைக்கவும். 

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். 

ப.மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளவும். 

பூண்டை நசுக்கி வைக்கவும்.

குக்கரில் பிரஷர் அடங்கியதும், கிழங்கை வெளியே எடுத்து, ஆற வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். 

மசித்த கிழங்குடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.  

பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு  சேர்த்து வதக்கவும்.

இவை  லேசாக வதங்கியவுடன், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, பின் மசித்த கிழங்கைச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.

பிறகு அரை கப் தண்ணீர் சேர்த்து கிளறி, மூடி வைத்து சிம்மில் 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து 5 நிமிடங்கள் சிம்மிலேயே வைத்துக் கிளறி இறக்கவும்.

சூப்பரான செட்டிநாட்டு பிடிகருணை மசியல் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News