லைஃப்ஸ்டைல்
பிரெட் ரசமலாய்

பிரெட் ரசமலாய்

Published On 2020-11-07 04:04 GMT   |   Update On 2020-11-07 04:04 GMT
பிரெட்டை வைத்து எளிமையான முறையில் ரச மலாய் எப்படி செய்யலாம் என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்
பிரெட் - 5 ஸ்லைஸ்கள்
சர்க்கரை - 50 கிராம்
முந்திரி - சிறிதளவு நறுக்கியது
பிஸ்தா - சிறிதளவு நறுக்கியது
கிஸ்மிஸ் - சிறிதளவு
பாதாம் - சிறிதளவு நறுக்கியது
ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு

செய்முறை:

பாலை நான்ஸ்டிக் வாணலியில் ஊற்றி சிறு தீயில் வைத்து கொதிக்க விடவும். பால் நன்றாகக் கொதிக்கும் பொழுது கரண்டியால் அதை நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பாலானது நிறம் மாறும் பொழுது எடுத்து வைத்துள்ள சர்க்கரை, சிறிதளவு முந்திரி, பிஸ்தா, பாதாம் மற்றும் உலர் திராட்சை (கிஸ்மிஸ்) போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.

பின்பு, நடுத்தரமாக தீயை வைத்து பாலானது நான்கில் ஒரு பாகமாக சுண்டும் வரை கரண்டியால் கிளறவும். அதன் மேல் ஆடையானது படியப்படிய அவற்றைக் கரண்டியால் கிளறி குறைந்தது இருபது நிமிடங்கள் வரை வைத்திருந்தால் பாலானது கெட்டியாகத் துவங்கி விடும்.

இப்பொழுது ஏலக்காய் பொடியைத் தூவி ஒரு நிமிடம் அடுப்பில் வைத்துக் கிளறிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு வாணலியை கீழே வைத்து நன்கு ஆற வைக்க வேண்டும். இந்த மலாய் பாலானது மேலும் கெட்டிப் பதத்தில் பார்க்கவே கலர் ஃபுல்லாக இருக்கும்.

இப்பொழுது பிரட் துண்டுகளை எடுத்து ஓரத்திலிருக்கும் பிரவுண் பகுதியை நீக்கி விட்டு வெள்ளைப் பகுதியை ஒரு டம்ளர் அல்லது விளிம்பு கூரான கிண்ணத்தின் உதவியால் பட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

இந்த வட்டமான வில்லைகளை மலாய் பாலில் அரை நிமிடம் ஊறவிட்டு பின்பு வெளியே எடுத்து தட்டில் வைத்து அவற்றின் மேல் மலாய் பாலை ஊற்றி அதன்மேல் மீதம் வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை மற்றும் குங்குமப்பூவைத் தூவினால் பிரெட் ரசமலாய் தயார்.
Tags:    

Similar News