லைஃப்ஸ்டைல்
அட்டகாசமான சுவையில் பன்னீர் பெப்பர் பிரை

அட்டகாசமான சுவையில் பன்னீர் பெப்பர் பிரை

Published On 2020-10-13 09:33 GMT   |   Update On 2020-10-13 09:33 GMT
சிக்கன், காளான் பெப்பர் பிரை சாப்பிட்டிருப்பீர்கள். அந்த வகையில் இன்று பன்னீரை வைத்து அட்டகாசமான பெப்பர் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பன்னீர் - 200 கிராம்
சோளமாவு - 25 கிராம்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு நறுக்கியது - 25 கிராம்
வெங்காயம் - 1 பெரியது
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
நொறுக்கிய மிளகு - 20 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - ஒரு கட்டு
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை


பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்

கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பன்னீர் துண்டுகளை, சோளமாவில் நனைத்து, எண்ணெயில் போட்டு நன்குப் பொரித்து கொள்ளவும். எண்ணெயில் இருந்து எடுத்து, கிச்சன் டவலில் வைத்து, எண்ணெயை வடிக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.

வெங்காயம், கறிவேப்பிலைகள், பச்சை மிளகாய் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் வறுத்த பன்னீர் துண்டுகள், மிளகு தூள், எலுமிச்சை சாறு சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான பன்னீர் பெப்பர் பிரை ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News