லைஃப்ஸ்டைல்
சூப்பரான மாலை நேர சிற்றுண்டி மசாலா இட்லி

சூப்பரான மாலை நேர சிற்றுண்டி மசாலா இட்லி

Published On 2020-09-17 09:35 GMT   |   Update On 2020-09-17 09:35 GMT
காலையில் மீதமான இட்லியை வைத்து மாலையில் சுவையான மசாலா இட்லி செய்யலாம். இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

இட்லி - 8
பட்டை, சோம்பு, ஏலக்காய் - சிறிதளவு
இஞ்சி - 1 துண்டு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
சிவப்பு நிறமூட்டி- சிறிதளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 9

செய்முறை:

இட்லிகளை ஓரளவு பெரிதாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி, பச்சைமிளகாய் இஞ்சி, பட்டை சோம்பு மசாலாப் பொருட்களைச் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.

தாளிக்கத் தேவையானவற்றைத் தாளித்து பின் அரைத்தக் கலவையை போட்டு பச்சை வாடை போக வதக்கவும்.

இதனுடன் நறுக்கிய இட்லித்துண்டுகளைச் சேர்த்து வதக்கி எடுக்க சுவையான மசாலா இட்லி தயார்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News