பெண்கள் உலகம்
கடுகு சாதம்

கடுகு சாதம் செய்வது எப்படி?

Published On 2020-06-15 16:19 IST   |   Update On 2020-06-15 16:19:00 IST
கடுகு ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், நார்ச்சத்தும் உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.
தேவையான பொருட்கள்

பச்சரிசி - நான்கு ஆழாக்கு
மிளகாய் வற்றல் - 20
கடலைப்பருப்பு - 40 கிராம்
கடுகு - 20 கிராம்
மஞ்சள் பொடி - சிறிதளவு
பெருங்காயத்துள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 20 கிராம்
புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு.



செய்முறை

அரிசியை சாதமாக சமைத்து ஒன்றோடு ஒன்று ஒட்டாது பக்குவத்தில் இறக்கி தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.

கடுகை வெறும் கடாயில் போட்டு வெடிக்கும் அளவுக்கு வறுத்துகொள்ளவும்.

மிளகாய் வற்றல், வறுத்த கடுகு, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி, புளி, உப்பு இவற்றை வைத்து வெண்ணெய் போல அரைத்து சாதத்தில் நன்றாக கலக்கவும்

பிறகு நல்லெண்ணையை வாணலியில் விட்டு சூடானதும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து பின்னர் அதில் சாதத்தை கொட்டி நன்றாக கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான கடுகு சாதம் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News