லைஃப்ஸ்டைல்
கேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கன் விங்க்ஸ்

வீட்டிலேயே கேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கன் விங்க்ஸ் செய்யலாம் வாங்க

Published On 2020-05-27 10:30 GMT   |   Update On 2020-05-27 10:30 GMT
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருப்பதால், நாம் அனைவரும் விருப்பமான உணவுகளை வெளியே சாப்பிட முடியாமல் உள்ளோம். இன்று கேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கனை வீட்டிலே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

ஊறவைக்க:  


சிக்கன் விங்ஸ் (சுத்தம் செய்தது) - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தயிர் - அரை கப்
சிவப்பு மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
எலுமிச்சை - விருப்பத்திற்கு ஏற்ப

கோட் செய்ய:

மசாலா சிப்ஸ்
எண்ணெய்



செய்முறை:

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் விங்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து  30 நிமிடங்கள் ஃபிரிஜில் வைக்கவும்.

இதற்கிடையில், மசாலா சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து, வெறும் கடாயில் வறுக்கவும். சிப்ஸை பொடியாக நசுக்கவும்.

இப்போது ஃபிரிஜில் இருக்கும் சிக்கனை எடுத்து, ஒவ்வொரு பீஸிலும் இந்த மசாலா சிப்ஸை கோட் செய்யவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் இந்த சிக்கனை போட்டு மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.

பிறகு இந்த சிக்கன் பீஸ் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான  கேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கன் விங்க்ஸ் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News