லைஃப்ஸ்டைல்
மொச்சை சாம்பார்

சூப்பரான மொச்சை சாம்பார்

Published On 2020-05-06 10:22 GMT   |   Update On 2020-05-06 10:22 GMT
மொச்சை காரக்குழம்பு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மொச்சை வைத்து சுவையான சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உலர் மொச்சை - 100 கிராம்,
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
துவரம்பருப்பு - 100 கிராம்,
புளி -  எலுமிச்சைப் பழ அளவு,
தேங்காய்த் துருவல் - சிறிய கப்,
கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,  
தனியா - ஒரு டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,  
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும்.

தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும்.

இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த  விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும்.

சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

சூப்பரான மொச்சை சாம்பார் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News