லைஃப்ஸ்டைல்
பிரைடு காளான் மசாலா

சூப்பரான பிரைடு காளான் மசாலா

Published On 2020-05-05 10:26 GMT   |   Update On 2020-05-05 10:26 GMT
தோசை, நாண், சப்பாத்தி, சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பிரைடு காளான் மசாலா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

காளான் - 250 கிராம்
மைதா மாவு - கால் கப்
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 4 டேபிள்ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா 2  
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
தக்காளி கெட்சப் - ஒரு டீஸ்பூன்
சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு



செய்முறை

காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.

காளான் துண்டுகளுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, மைதா மாவு, மீதமுள்ள கார்ன்ஃப்ளார், அரிசி மாவு சேர்த்துப் பிசிறவும்.

அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசிறவும்.

வாணலியில் எண்ணெய்யைக் காயவிட்டு, காளான் துண்டுகளைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அதனுடன் தக்காளி, தக்காளி கெட்சப், சில்லி சாஸ், மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

அதனுடன் சோள மாவு கரைசல், பொரித்த காளான் துண்டுகள், கொத்தமல்லித்தழை சேர்த்து, எல்லாமும் நன்றாகச் சேர்ந்துவரும் வரை கொதிக்கவிட்டுக் கிளறி இறக்கவும்.

சூப்பரான பிரைடு காளான் மசாலா ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News