லைஃப்ஸ்டைல்
அத்திப்பழ அல்வா

தித்திப்பான அத்திப்பழ அல்வா

Published On 2020-04-30 10:23 GMT   |   Update On 2020-04-30 10:23 GMT
அத்திப்பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காய்ந்த அத்திப்பழத்தை வைத்து சுவையான தித்திப்பான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

காய்ந்த அத்திப்பழம் - பதினைந்து
நெய் - கால் கப்
பாதாம் + முந்திரி - ஊறவைத்து தோலுரித்து பொடித்தது - அரை கப்
சர்க்கரை - முக்கால் கப்
பால்பவுடர் - முக்கால் கப்
ஏலப்பொடி - கால் டீஸ்பூன்

அலங்கரிக்க

குச்சியாக நறுக்கப்பட்ட பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்.
வறுத்த முந்திரி கிஸ்மிஸ் - தலா 12.



செய்முறை:

இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து காய்ந்த அத்திப்பழங்களைச் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.

மென்மையானவுடன் தண்ணீரை வடிகட்டவும்.

மிக்ஸியில் வேகவைத்த அத்திப்பழங்களை மட்டும் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்து வைக்கவும்.

நெய்யை அடி கனமான பாத்திரத்தில் போட்டு பொடித்த பாதாமை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.

இதில் அரைத்த அத்திப்பழ விழுது, பால்பவுடர், சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும்.

5 நிமிடம் விடாமல் கிளறவும்.

இறுகியதும் ஏலப்பொடி தூவி இறக்கி பாதாம் துருவல் தூவிப் பரிமாறவும்.

சூப்பரான அத்திப்பழ அல்வா ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News