லைஃப்ஸ்டைல்
வெங்காயத்தாள் முட்டை பொரியல்

வெங்காயத்தாள் முட்டை பொரியல்

Published On 2020-04-15 10:28 GMT   |   Update On 2020-04-15 10:28 GMT
வெங்காயத்தாள் முட்டை பொரியலை சூடான சாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். சப்பாத்திக்குத் தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

வெங்காயத்தாள் - 1 கட்டு
சின்ன வெங்காயம் -  10
வரமிளகாய் - 4
கடுகு - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு -  அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
முட்டை - 3
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் -  தேவைக்கேற்ப



செய்முறை :

வெங்காயம், வெங்காயத்தாளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

 பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, உப்பு, நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்க்கவும்.

 வெங்காயத்தாள் சில நிமிடங்களிலேயே வதங்கிவிடும்.

பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.

முட்டை வெந்தது உதிரியாக வந்ததும்  அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான வெங்காயத்தாள் முட்டை பொரியல் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News