லைஃப்ஸ்டைல்
வரகரிசி பாயாசம்

தித்திப்பான வரகரிசி பாயாசம்

Published On 2020-04-09 09:56 GMT   |   Update On 2020-04-09 09:56 GMT
வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் அனைவருக்கும் மாலையில் சத்தான சிறுதானியங்களில் ரெசிபி செய்து கொடுக்கலாம். இன்று வரகரிசி பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

வரகரிசி - 100 கிராம்,
தேங்காய் பால் - 1 கப்,
துருவிய வெல்லம் - அரை கப்,
பாசிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப,
ஏலக்காய் தூள் - கால் தேக்கண்டி,
நெய் அல்லது எண்ணெய் - அரை தேக்கரண்டி.



செய்முறை:

வரகு அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

துருவிய வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதித்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.

பாசிப்பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, ஊற வைத்த அரிசியுடன் சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

வெந்ததும், அதை நன்கு மசித்து, வெல்லப் பாகு சேர்த்து ஒரு கொதிக்க விடவும்.

பிறகு தேங்காய் பால் விட்டு கொதி வரும் முன் இறக்கவும்.

பின்னர், ஏலக்காய் சேர்த்து, நெய் அல்லது எண்ணெயில் வறுத்த முந்திரி, திராட்சை தூவிப் பரிமாறவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News