பெண்கள் உலகம்
பிரவுன் ரைஸ் பிஸிபேளாபாத்

பிரவுன் ரைஸ் பிஸிபேளாபாத்

Published On 2020-03-06 14:02 IST   |   Update On 2020-03-06 14:02:00 IST
பிரவுன் ரைஸில் பிஸிபேளாபாத் செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
 
பிரவுன் ரைஸ் - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 7 கப்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 1/2 கப்
பீன்ஸ் - 1/2 கப்
கேரட் - 1/2 கப்
பட்டாணி - 1/2 கப்

பொடி பண்ண :

கடலைபருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10
வற்றல் மிளகாய் - 5
பெருங்காயம் - 1 துண்டு
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
துருவிய தேங்காய் - 1/2 கப்

தாளிக்க :


கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 2
முந்திரிபருப்பு - 10
நிலக்கடலை - 10 (உடைத்தது)



செய்முறை:


வெங்காயம், கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிரவுன் ரைஸ் ஒரு கப்புக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம் வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் அடி பாத்திரத்தில் பிரவுன் ரைஸையும், மேல் தட்டில் துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீருடன் வைத்து 6 விசில் விட்டு குக்கரை அணைக்கவேண்டும்.

பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.

அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

வேகவைத்த சாதம், பருப்பு இரண்டையும் குக்கர் பாத்திரத்தில் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

அதில் வதக்கின காய்கறிகள், அரைத்து வைத்துள்ள பொடி, தேவையான உப்பு சேர்க்கவும்.

சாதம், பருப்பு, காய்கறிகள், பொடி எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து மீதமுள்ள தண்ணீர் (1 1/2 கப்) சேர்த்து அடுப்பை ஸ்லிம்மில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்..

முந்திரிபருப்பு, நிலக்கடலை, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் எல்லாவற்றையும் நெய்யில் வறுத்து சேர்த்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான பிரவுன் ரைஸ் பிஸிபேளாபாத் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News