லைஃப்ஸ்டைல்
பிரெட் காரப்பணியாரம்

மாலை நேர டிபன் பிரெட் காரப்பணியாரம்

Published On 2020-02-18 08:27 GMT   |   Update On 2020-02-18 08:27 GMT
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு வித்தியாசமான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் பிரெட் வைத்து காரப்பணியாரம் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :

வெங்காயம், கேரட் - தலா 2,
பிரெட் துண்டுகள் - 6,
இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது - தலா ஒரு டீஸ்பூன்,
தயிர் - ஒரு கப்,
கடுகு - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:


வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட்டைத் துருவிக்கொள்ளவும்.

பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

பொடித்த பிரெட்டுடன் தயிர், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்த்து கலக்கவும்.

அடுத்து அதில் துருவிய கேரட், வெங்காயத்தை சேர்த்து, கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான பிரெட் காரப்பணியாரம் ரெடி.

தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்து தொட்டு சாப்பிடலாம்.

சாஸ், சட்னி போன்றவையும் நன்றாக இருக்கும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News