பெண்கள் உலகம்
பிஷ் தவா கிரில்டு

சூப்பரான பிஷ் தவா கிரில்டு

Published On 2020-01-31 14:02 IST   |   Update On 2020-01-31 14:02:00 IST
குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சுவைமிக்க, பிஷ் தவா கிரில்டு செய்வதற்கான எளிய செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

வாவல் மீன் - 3
முட்டை - 1
அரிசி மாவு - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் துாள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் துாள் - 1 டீஸ்பூன்
மல்லி துாள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப



செய்முறை :

மீனை சுத்தம் செய்து, அதன் மீது குறுக்காக ஸ்லைஸ் போடுவது போல, ஆங்காங்கே வெட்டிக் கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி துாள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

மீனின் மீது இந்த மசாலாவை சேர்த்து நன்றாக பிரட்ட வேண்டும். மீனில் மசாலா நன்கு இறங்க வேண்டும்.

அடுத்து அதில் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.

இறுதியாக, அரிசி மாவு, முட்டை இரண்டையும் கலந்து, அரை மணிநேரம் ஊறவிடவும்.

'நான்-ஸ்டிக்' கிரில் தவாவில் எண்ணெய் சூடானதும், மீனை நன்கு வறுக்கவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும், தட்டில் வைத்து கொத்தமல்லி தழையை தூவி, வெங்காயம் மற்றும் எலுமிச்சை சேர்த்து பரிமாறவும்.

சூப்பரான பிஷ் தவா கிரில்டு ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News