லைஃப்ஸ்டைல்
பாஸந்தி

வீட்டில் பாஸந்தி செய்வது எப்படி?

Published On 2020-01-09 08:32 GMT   |   Update On 2020-01-09 08:32 GMT
பாஸந்தி என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கடைகளில் கிடைக்கும் பாஸந்தியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையா பொருட்கள் :

பால் - அரை லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்
சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
பாதாம் - 6 (நறுக்கவும்)
முந்திரி பருப்பு - 10 (நறுக்கவும்)
பிஸ்தா - 6 (நறுக்கவும்)
குங்குமப்பூ - 5 பிசிறுகள்



செய்முறை:

பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சிக்கொள்ளவும்.

பின்னர் அதனுடன் கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் வைத்து கிளறிக்கொண்டே வரவும்.

அப்போது பாலாடை உருவாக ஆரம்பிக்கும். பால் கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

பால் நன்கு கெட்டியானதும் இறக்கவும்.

அதனுடன் பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா, ஏலக்காய் தூள், குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி ஒரு பாத்திரத்தில் ஊற்றி பிரிட்ஜ்ஜில் குளிர வைத்து பருகலாம்.

சூப்பரான பாஸந்தி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News