லைஃப்ஸ்டைல்
பசலைக்கீரை பூரி

குழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை பூரி

Published On 2019-11-13 08:38 GMT   |   Update On 2019-11-13 08:38 GMT
குழந்தைகள் கீரை என்றால் சாப்பிடமாட்டார்கள். இவர்களுக்கு இந்த முறையில் கீரையை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்,
பசலைக்கீரை - 2 கட்டு,
சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை போட்டு சிறிது நேரம் வதக்கிய பிறகு ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து) மிருதுவான பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பிறகு மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான சத்தான பசலைக்கீரை பூரி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News