பெண்கள் உலகம்
கவுனி அரிசி அதிரசம்

கவுனி அரிசி அதிரசம்

Published On 2019-11-05 14:02 IST   |   Update On 2019-11-05 14:02:00 IST
மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினைகளுக்கு கவுனி அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த அரிசியில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
    
கவுனி அரிசி - ஒரு கிலோ
பாகு  வெல்லம் - அரை கிலோ
சர்க்கரை - ஒரு ஸ்பூன்
ஏலக்காய் - 4
தேவையான எண்ணெய் - பொரிப்பதற்கு



செய்முறை

கவுனி அரிசியை நன்றாக கழுவி 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

பின்னர் தண்ணீரை வடிகட்டி ஒரு துணியில் சிறிது ஈரப்பதம் இருக்கும் வரை ஆறவிட வேண்டும். அரிசியை மாவாக திரிக்க வேண்டும்.

பாகு வெல்லத்தை பொடித்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி பாகு வெல்லத்தை சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு வெல்லத்தை எடுக்க வேண்டும்.

அதன்பின் கவுனி அரிசி மாவில் சர்க்கரை, பொடித்த ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறிய பிறகு வட்ட வடிவில் கவுனி அரிசி மாவை தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூடான சுவையான கவுனி அரிசி அதிரசம் தயார்.

இந்துமதி

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News