லைஃப்ஸ்டைல்
நாட்டு கோழி குருமா

சன்டே ஸ்பெஷல்: நாட்டு கோழி குருமா

Published On 2019-09-21 08:33 GMT   |   Update On 2019-09-21 08:33 GMT
நாளை (ஞாயிற்று கிழமை) சன்டே ஸ்பெஷலாக வாய்க்கு ருசியாக நாட்டு கோழியில் தயாரிக்கப்படும் நாட்டு கோழி குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி - ஒரு கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தனியா தூள் - ஒரு ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
கசகசா - ஒரு ஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.

மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுத்தால் சுவையான நாட்டு கோழி குருமா ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News