லைஃப்ஸ்டைல்
பிரஷர் குக்கரில் மட்டன் பிரியாணி

பிரஷர் குக்கரில் மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

Published On 2019-09-07 07:32 GMT   |   Update On 2019-09-07 07:32 GMT
நாளை சன்டே ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை குக்கரில் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

மட்டன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

அரைக்க

சிறிய வெங்காயம் - 10
பூண்டு - 15 பற்கள்
பச்சை மிளகாய் - 4
சிவப்பு மிளகாய் - 4
தேங்காய் - 2 தேக்கரண்டி (துருவியது )
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி
இஞ்சி - சிறிய துண்டு

சமையலுக்காக

நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 4
தக்காளி - 3
பாஸ்மதி அரிசி - 3 கப் (30 நிமிடங்கள் ஊறவைத்தது )
நீர்த்த தேங்காய் பால் - 3 கப்
புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி
பட்டை - 1
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
பிரியாணி இலை - 2
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மட்டனை பெரிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிக்கொள்ளவும்.

கழுவிய மட்டனில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகிவற்றை சேர்த்து ஒரு 30 நிமிடம் ஊற வைக்கவும்.

மிக்சியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், துருவிய தேங்காய், புதினா, கொத்தமல்லி இலை, மல்லித்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மை போல் அரைத்து கொள்ள வேண்டும்.

குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.

வெங்காயம் சிவந்த பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் ஊற வைத்த மட்டன் துண்டுகளை வதக்கியவற்றுடன் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கிளறி விடவும்.

இந்த நிலையில் உப்பு, தண்ணீர், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு ஏழு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

வேக வைத்த மட்டனில் முப்பது நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசியை கலந்து பின்பு குக்கரை மூடிவிட்டு ஏழு நிமிடங்களுக்கு வேக விடவும்.

அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து குக்கரை திறக்கவும்.

சூடான சுவையான பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி தயார்

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News