லைஃப்ஸ்டைல்
நண்டு சூப்

ஜலதோஷத்தை துரத்தும் நண்டு சூப்

Published On 2019-07-20 08:22 GMT   |   Update On 2019-07-20 08:22 GMT
நண்டு சூப்பை சாப்பிட்டால் தெரியும் அதன் ருசி. இந்த நண்டு சூப்பை செய்வது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்

நண்டு - அரை கிலோ
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 துண்டு
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயத் தாள் - 3
கான்ப்ளார் பவுடர் - ஒன்றரை தேக்கரண்டி
பால் - கால் கப்



செய்முறை :

வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆறவிட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும்.

வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும்.

பாலில் கான்ப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும்.

கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, கான்ப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத்தாள் தூவினால் சுவை மிகுந்த நண்டு சூப் தயார்.

ஜலதோஷம் பிடித்தால் அதை துரத்துவதற்கு நல்ல மருந்து.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News