லைஃப்ஸ்டைல்
வெண்டைக்காய் சாதம்,

வெண்டைக்காய் சாதம் செய்வது எப்படி?

Published On 2019-07-06 07:49 GMT   |   Update On 2019-07-06 07:49 GMT
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வெண்டைக்காய் சாதம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த சாதத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - 100 கிராம்,
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்,
கெட்டியான புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் -  அரை டீஸ்பூன்,  
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
பட்டை - 2,
கடுகு - 1  டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை :

வெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து வந்துவிடாமல் லாவகமாக வகிர்ந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் வெண்டைக்காயை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

லேசாக வெந்ததும், அதில் மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.  

குறைந்த தணலில் வைத்து, மசாலா வெண்டைக்காய் முழுவதும் படிகிற படி வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, பட்டை, மஞ்சள் தூள் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வறுக்கவும்.

இதில் சாதம், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி, வெண்டைக்காய் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.

குறைந்த தணலில், சாதம், மசாலா எல்லாம் சேர்ந்து வரும்படி 5 நிமிடங்களுக்குக் கலந்து பரிமாறவும்.

சூப்பரான வெண்டைக்காய் சாதம் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News