லைஃப்ஸ்டைல்
பன்னீர் பட்டர் மசாலா

சூப்பரான பன்னீர் பட்டர் மசாலா

Published On 2019-07-04 08:41 GMT   |   Update On 2019-07-04 08:41 GMT
புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் பட்டர் மசாலா. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கரம் மசாலா பொடி: இந்தப் பொடியை ஒரு வாரம் மட்டுமே வைத்திருக்கும் அளவுக்கு கொஞ்சமாகத் தயாரிப்பது நல்லது. வாசத்தோடு பயன்படுத்தத்தான் இப்படி!

செய்முறை:

லவங்கம் - 2 டீஸ்பூன்,
ஏலக்காய் - 1 டீஸ்பூன்,
பட்டை - 4,
தனியா - 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்…

இவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தால், அதுதான் கரம் மசாலா பொடி!

கறி மசாலா பொடி: இதை, மற்ற பொடிகளைப் போல மொத்தமாக செய்து வைத்துக் கொள்ளலாம்.

செய்முறை:


காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் - 1 கப்,
தனியா - அரை கப்,
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்,
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்,
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 5.

இவை அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து, அரைத்தால் கறி மசாலா ரெடி!



தேவையான பொருட்கள் :


பன்னீர் - 200 கிராம்,
பெரிய வெங்காயம் -3,
தக்காளி - 4,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்,
வெண்ணெய் - 50 கிராம்,
ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன் (பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அதுதான் ஃப்ரெஷ் க்ரீம்!),
காய்ந்த வெந்தயக் கீரை - 2 டீஸ்பூன்.

செய்முறை:

பன்னீரை சிறு துண்டுளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை ‘ஸிம்’மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.

கடைசியாக, பன்னீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.

ஃப்ரெஷ் கிரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.

குழந்தைகள் விரும்பும் சத்தான சைட் டிஷ், இந்த பன்னீர் பட்டர் மசாலா!

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News