லைஃப்ஸ்டைல்

மாலை நேர டிபன் தயிர் மினி இட்லி

Published On 2019-06-13 08:35 GMT   |   Update On 2019-06-13 08:35 GMT
காலையில் மீந்த மினி இட்லியை வைத்து மாலையில் அருமையான தயிர் மினி இட்லி செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மினி இட்லி - 20,
புளிப்பில்லாத கெட்டித்தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
காராபூந்தி - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - தேவைக்கு,
அலங்கரிக்க மாதுளை முத்துக்கள் - சிறிது.



செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சீரத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.

அதிகம் புளிக்காத மாவினால் மினி இட்லி செய்து கொள்ளவும்.

தயிரை நன்கு அடித்துக் கொண்டு, தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு ஆழமான தட்டில் இட்லிகளை வைத்து, அதன் மீது தயிரை ஊற்றி பரப்பவும்.

அதன் மீது ஒவ்வொன்றாக சீரகத்தூள், மிளகுத்தூள், கடைசியாக சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழையை தூவி, காராபூந்து, மாதுளை முத்துக்களால் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் பொடித்த திராட்சை, பைனாப்பிள் கொண்டு அலங்கரிக்கலாம். காராபூந்தியை சாப்பிடும் போது தான் சேர்க்க வேண்டும். முதலிலேயே சேர்த்தால் ஊறி விடும் நன்றாக இருக்காது.

தயிர் மினி இட்லி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News