லைஃப்ஸ்டைல்

ஜீரா ஆலு செய்வது எப்படி?

Published On 2019-04-05 06:45 GMT   |   Update On 2019-04-05 06:45 GMT
சாம்பார், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஜீரா ஆலு. இன்று இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 200 டகிராம்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்,
சாட் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.


 
செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெறும் கடாயில் சீரகம், மிளகு, தனியாவை வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம் போட்டு தாளித்த பின்னர் உருளைக்கிழங்கை போட்டு வறுக்கவும்.

உருளைக்கிழங்கு நன்கு மொறுமொறு என்று வந்தவுடன் உப்பு, மிளகாய்த்தூள், மாங்காய் பொடி, வறுத்து அரைத்த பொடி, சாட் மசாலாப் பொடி சேர்த்து வறுக்கவும்.

அனைத்தும் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையை கலந்து பரிமாறவும்.

சூப்பரான ஜீரா ஆலு ரெடி. 

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News