லைஃப்ஸ்டைல்

சூப்பரான குடைமிளகாய் பன்னீர் பிரை

Published On 2019-04-03 09:47 GMT   |   Update On 2019-04-03 09:47 GMT
நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கு கொள்ள குடைமிளகாய் பன்னீர் பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பன்னீர் - 200 கிராம்,
குடைமிளகாய் - 100 கிராம்,
வெண்ணெய் - 50 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
புதினா விழுது - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,
பாதாம் - 100 கிராம்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.

 


செய்முறை :

பன்னீரை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

பாதாமை 6 மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்காமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பன்னீரை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தனியாத்தூள் சேர்க்கவும்.

பின்பு பாதாம் விழுதைச் சேர்த்துக் கிளறி, வெந்த பன்னீர் துண்டுகள், புதினா விழுதை சேர்த்து கிளறவும்.

இத்துடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து கலந்து வறுவலாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.

சூப்பரான குடைமிளகாய் பன்னீர் பிரை ரெடி. 

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News