லைஃப்ஸ்டைல்

உருளைக்கிழங்கு புட்டு செய்வது எப்படி?

Published On 2018-06-05 06:27 GMT   |   Update On 2018-06-05 06:27 GMT
உருளைக்கிழங்கு அதிக அளவு கால்சியத்தை கொண்டிருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனி சுவையான உருளைக்கிழங்கு புட்டு செய்முறை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - கால் கிலோ
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - அரை மூடி
 
தாளிக்க :

கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
நல்லெண்ணெய் - தாளிக்க தேவையான அளவு


 
செய்முறை :

முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக்கொள்ளவும்.

சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தோலுரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் தேவையான அளவு உப்பினைச் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

வாணலியில் தேவையான அளவு நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.

அடுத்து அதில் உருளைக்கிழங்கினைச் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

சுவையான உருளைக்கிழங்கு புட்டு தயார்.

இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News