லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான சொஜ்ஜி அப்பம்

Published On 2018-04-23 06:18 GMT   |   Update On 2018-04-23 06:18 GMT
குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான கேரளா ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ரவை - 1 கப்,
மைதா - ஒன்றரை கப்,
வெல்லம் - 1 கப்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
ஏலக்காய் - 4,  
நெய் - அரை டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 கப்,
உப்பு - சிட்டிகை.



செய்முறை :

வெல்லத்தைத் தூளாக்கி, சிறிது நீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

மைதா மாவில் உப்பை சேர்த்து, பூரி மாவுபோல் கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி அதில் ரவையைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, வெல்லக் கரைசல் எல்லாவற்றையும் சேர்த்து, மாவு கெட்டி ஆகும்வரை கிளறவும். அதுவே தானாக பந்துபோல் சுருண்டு வந்துவிடும். இதை நன்றாக ஆறவைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இலை ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளவும். பிசைந்து வைத்திருக்கும் மைதாமாவை சிறிது எடுத்து மெலிதாக பரப்பி, அதில் ரவை பூரணத்தை வைத்து மூடி, கையில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு, வட்டமாகத் தட்டி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ளவைகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சூப்பரான சொஜ்ஜி அப்பம் ரெடி.

குழந்தைகளின் ஃபேவரிட் இந்த அப்பம்!

இந்த அப்பம் நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பொன்னிறமாக எடுத்தால் சுவை நன்றாக இருக்கும். செந்நிறமாக மாறவிட வேண்டாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News