பெண்கள் உலகம்

குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி ரோல்

Published On 2018-04-20 15:22 IST   |   Update On 2018-04-20 15:22:00 IST
விடுமுறை நாட்களில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போது முட்டை சப்பாத்தி ரோல் செய்து எடுத்து சென்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் - 2
முட்டை - 3
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 2 ஸ்பூன்
சப்பாத்தி - 4
லெமன் ஜூஸ் - தேவையான அளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு



செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டை உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வெந்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கவும்.

முட்டை வெந்தவுடன் கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

ஒரு தட்டில் மேல் ஒரு சப்பாத்தியை வைத்து நடுவில் சிறிது முட்டை பொரியலை பரப்பி, கொஞ்சம் வெங்காயம், அரை மூடி லெமன் ஜூஸ் தெளித்து ரோல் செய்து பரிமாறவும். இவ்வாறு அனைத்து சப்பாத்தியிலும் செய்யவும்.

சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News