லைஃப்ஸ்டைல்

ஓட்ஸ் கேசரி செய்வது எப்படி

Published On 2018-04-09 06:32 GMT   |   Update On 2018-04-09 06:32 GMT
ஓட்ஸில் கஞ்சி, பொங்கல், கூழ் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஓட்ஸை வைத்து சூப்பரான கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் - 1 கப்
நெய் - தேவையான அளவு
கேசரி கலர் - சிறிது
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
பாதாம், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை - தேவையான அளவு



செய்முறை :

பாதாமை கொரகொரப்பாக பொடித்த கொள்ளவும்.

முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும்.

கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, அதில் ஓட்ஸைப் போட்டு 3 நிமிடங்கள் வரை வறுக்கவும்.

பின்னர் அதில் பாலை ஊற்றிக் கிளறி விடவும். மிதமான தீயில் கெட்டியாகும் வரை வேக விடவும்.

பின்னர் அதில் சர்க்கரை மற்றும் கேசரிக் கலரைச் சேர்த்துக் கிளறவும்.

மீண்டும் அதில் 2 டீஸ்பூன் நெய்யை விட்டு, கைவிடாமல் கிளறி விடவும்.

இப்போது வறுத்த முந்திரிப்பருப்பையும், திராட்சையையும் சேர்க்கவும்.

அடுத்து அதில் பாதாம், ஏலக்காய் தூளையும் அதில் தூவி, நன்றாகக் கிளறவும்.

கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது, அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

சூப்பரான கமகம ஓட்ஸ் கேசரி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News