லைஃப்ஸ்டைல்

சூப்பரான ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல்

Published On 2018-04-03 09:32 GMT   |   Update On 2018-04-03 09:32 GMT
குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீனை வைத்து ஆந்திரா ஸ்டைலில் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மீன் - 8 துண்டுகள் (துண்டு மீன்)
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

மசாலாவிற்கு…

வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்



செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மீனை துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி, சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மசாலாவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து மீனின் மீது தடவி, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.

பின்பு ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை அந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் பிரட்டி பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

வறுத்த மீனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் பொரித்த கறிவேப்பிலையை போட்டு பரிமாறவும்.

இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் ரெடி!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News