லைஃப்ஸ்டைல்

சென்னா பிரியாணி செய்வது எப்படி

Published On 2018-03-31 08:28 GMT   |   Update On 2018-03-31 08:28 GMT
சென்னாவில் (வெள்ளை கொண்டைக்கடலை) மசாலா, சுண்டல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சென்னாவை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

சென்னா வெள்ளை(வெள்ளை கொண்டைக்கடலை)  - 150 கிராம்
வெங்காயம்  பெரியது - 1
தக்காளி - 2
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
உப்பு - தேவைக்கு
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகாய்த்துள் - 1 ஸ்பூன்
[பாட்டி மசாலா] கரம் மசாலா - 1 ஸ்பூன்
தயிர் - 1 குழிக்கரண்டி
புதினா இலை - சிறிது
பாசுமதி அரிசி - 200 கிராம்

தாளிக்க

பட்டை,
லவங்கம்,
ஏலக்காய்,
பிரியாணி இலை,
முந்திரி,
நெய் - 1 ஸ்பூன்,
எண்ணைய் - தேவைக்கு



செய்முறை :

பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

வெள்ளை சென்னாவை 6 மணிநேரம் ஊறவைத்து உப்பு போட்டு வேக வைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, இஞ்சி,பூண்டு இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் லவங்கம், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, முந்திரி போட்டு தாளித்த பின்னர் அரைத்த விழுதை சேர்த்து, வதக்கவும்.

விழுது நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலாத்தூள் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து தயிர் சேர்க்கவும்.

அடுத்து அதில் புதினா, வேகவைத்த சென்னா சேர்த்து கிளறி, இறுதியில் சாதம் சேர்த்து கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் மூடிவைத்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சென்னா பிரியாணி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News