லைஃப்ஸ்டைல்

சூப்பரான சிக்கன் - முட்டை சாதம்

Published On 2018-03-24 06:42 GMT   |   Update On 2018-03-24 06:42 GMT
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன், முட்டை வைத்து சூப்பரான வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 2
எண்ணெய் - தேவையான அளவு
கேரட் - 2
பட்டாணி - ½ கப்
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
முட்டை - 2
சோயா சாஸ் - 1 /4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
சிக்கன் எலும்பில்லாதது - 150 கிராம்
வெங்காயத் தாள் - 4
அரிசி - 1 கப்



செய்முறை :

சிக்கனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வடித்து கொள்ளவும்.

வெங்காயம், கேரட், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட், பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

அரிசியை நன்றாக வேகவைத்து உதிரியாக வடித்து கொள்ளவும்.

முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்..

கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக பொரித்து எடுத்து வைத்த கொள்ளவும்.

அதே கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும்.

இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

இதனுடன் 2 மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் பொரித்து வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 2 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.

சூப்பரான சிக்கன் - முட்டை சாதம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News