லைஃப்ஸ்டைல்

வெயிலுக்கு குளுகுளு பாதாம் பிசின் ரோஸ் மில்க்

Published On 2018-03-23 06:35 GMT   |   Update On 2018-03-23 06:35 GMT
குழந்தைகளுக்கு ரோஸ் மில்க் என்றால் மிகவும் பிடிக்கும். கோடை வெயிலுக்கு பாதாம் பிசின் வைத்து ரோஸ் மில்க்கை செய்வது எப்படி என்று பார்ககலாம்.
தேவையான பொருட்கள் :

பால் - கால் லிட்டர்
சீனி - கால் கப்
ரோஸ் மில்க் எசன்ஸ் - கால் தேக்கரண்டி
ஊற வைத்த பாதாம் பிசின் - 3 மேசைக்கரண்டி



செய்முறை :

பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.

பாதாம் பிசினில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைக்கவும். காலையில் எடுத்து மேலே இருக்கும் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஆற வைத்த பாலுடன் சீனி சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

சீனி கரைந்ததும் ரோஸ் மில்க் எசன்ஸுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கலந்து அதை பாலில் ஊற்றி நன்றாக கலக்கவும்.

பிறகு அதில் ஊற வைத்த பாதாம் பிசினை போட்டு நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து பரிமாறவும்.

கோடை வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான பாதாம் பிசின் ரோஸ் மில்க் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News